Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

‘அமைதியாகச் செல்லவும்’ விளம்பர பலகையை அகற்ற முடியாது: நீதிவான் உத்தரவு

Saturday, August 240 comments

குருநாகல் கண்டி வீதியில்  பறகஹதெனிய என்ற இடத்தில் பள்ளிவாசல்களுக்கு முன்னால அமைந்துள்ள அமைதியைப் பேணவும் என்ற விளம்பரப் பலகை எதிர்வரும்  செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை உரிய இடத்திலேயே இருக்க வேண்டும் எனவும் விசாரணை முடியும் வரை அதனை அகற்ற முடியாது எனவும்  மாவத்தகம மஜிஸ்ட்ரேட் நீதவான் உத்தரவிட்டார்.
 
மாவத்தகம பொலிஸ் பிரிவில் கண்டி வீதியில் அமைந்துள்ள பறகஹதெனிய ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு முன்னால் போடப்பட்டுள்ள ‘அமைதியாகச் செல்லவும்’ என்ற வாசகத்தைக் கொண்ட விளம்பரப் பலகைஙில் உள்ள வாசகத்தை 14-08-2013 அதிகாலை 4.00 மணியளவில் மறைக்க முற்பட்ட நபர் ஒருவர் ஊர் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு மாவத்தகம பொலிஸில் ஒப்படைக்கப்ட்டிருந்தார். 
 
குறித்த நபரை பொலிஸார் மாவத்தகம மஜிஸ்ரேட் நீதமன்றத்தில் ஆஜர் செய்த போது நீதவான்  அந்த இளைஞரை  ஒரு வாரம் விளக்கமறியலில் வைக்குமாறும், அமைதியைப் பேணவும் என்ற விளம்பரப் பலகையை அகற்றுமாறும் 14 நாட்களுக்குள் குறித்த விளம்பரப்பலகைக்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தார். 
 
அதற்கேற்ப இரு பள்ளிவாசல் நிர்வாகிகள் ஒன்றிணைந்து அமைதியைப் பேணவும் என்ற விளம்பரப் பலகை வெள்ளையர் ஆட்சி காலம் தொட்டு இன்று வரை வீதிப் போக்குவரத்துச் சபையின் அங்கீகாரச் சான்றுகளுடன்  நிரந்தரமாக இருந்து வருவதற்கான நீண்ட கால வரலாற்றைக் கொண்ட ஆவணங்களை சட்டத்தரணி ஊடாக நேற்று 23-0-8-2013 வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தனர்.
 
அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே நீதவான் இந்த தீப்பினை வழங்கினார்.
 
மாவத்தகம பொலிஸ் பிரிவில் கண்டி குருநாகல் பிரதான வீதியில் அமைந்துள்ள இரு பள்ளிவாசல்களுக்கு முன்னால் அமைதியாகச் செல்லவும் என்று போடப்பட்டுள்ள விளம்பரப் பதாதையை மாவத்தகம பொலிஸார் 12-08-2013 மு.ப 10. மணி அளவில் அகற்றுவதற்காக வருகை தந்து அகற்ற முற்பட்ட போது ஊர் மக்களுக்கும் மற்றும் பொலிஸாருக்குமிடையே கருத்து முரண்பாடுகள் இடம் பெற்றதுடன் பிரதேசத்தில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
 
பொது பல சேனாவினால்  கடந்த 11.08.2013 அன்று குருநாகல் நகரில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டம் ஒன்றில் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞான தேரர் உரை நிகழ்துகையில், கண்டி குருநாகல் வீதியில் பறகஹதெனிய பள்ளிவாசலுக்கு முன்னால் அமைதியாகச் செல்லுங்கள் என்ற  விளம்பரப் பதாதையை அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் அதனை அகற்றா விட்டால் தாங்கள் அகற்ற வேண்டி வரும் எனவும் அங்கு அவர் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by