நேற்று புதன்கிழமை கிண்ணியாப்
பிரதேசத்தில் ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டது
ஊர்ஜிதப்படுத்தப்பட்டதையடுத்து இன்று வியாழக்கிழமை இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை நடாத்தப்பட்டுள்ளது .
கிழக்கு மாகாணத்தில் ஏறாவூர் தௌஹீத்
ஜமாஅத் ஏற்பாட்டில் ஏறாவூர் அலிகார் வித்தியாலய மைதானத்திலும்
காத்தான்குடியில் மஸ்ஜிதுல் குபா ஏற்பாட்டில் ஆற்றங்கரை முன்றலிலும்,
காத்தான்குடி தாறுல் அதர் அத்தஅவிய்யா ஏற்பாட்டில் ஏத்துக்கால் கடற்கரைத்
திடலிலும் புத்தளத்திலும் , அக்குரணையிலும் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.
மஸ்ஜிதுல் குபாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற
பெருநாள் தொழுகையில் பெருநாள் தொழுகையையும் குத்பாப் பேருரையும் மௌலவி
நஷ்மல் (பலாஹி) நிகழ்த்தினார்.
தாறுல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில்
இடம்பெற்ற பெருநாள் தொழுகையில் பெருநாள் தொழுகையையும் குத்பாப் பேருரையும்
மௌலவி அஸ்பர்(பலாஹி) நிகழ்த்தினார்.
இதேவேளை மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் பெருநாள் தொழுகை இடம்பெற்றுள்ளது.
புனித நோன்புப் பெருநாள் தலைப்பிறை
தொடர்பில் பிறை தென்பட்டது உறுதிப்படுத்தப்பட்டு அதை கிண்ணியா ஜம்இயதுல்
உலமா சபை ஏற்றுக்கொண்டு அறிவித்தும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அதை
ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப் படும் நிலையில் ரமளானை முப்பதாக
பூர்த்தியாக்குமாறு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment