Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

விளையாட்டு

ஐதராபாத் பந்து வீச்சால் சுருண்டது டெல்லி: 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி



ஐ.பி.எல் தொடரில் 48வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி டேர் டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் துடுப்பெடுத்தாடி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதில் சந்த் 17 ஓட்டங்களும், ஜெயவர்த்தனே 11 ஓட்டங்களும், பதான் 13 ஓட்டங்களும் எடுத்தனர். ஐதராபாத் அணி சார்பில் ஸ்டெயின், பெரேரா, சமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 81 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் 13.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் தவான் 22 ஓட்டங்களும், சமி 18 ஓட்டங்களும், படேல் 14 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஐதராபாத் அணி சார்பில் ஆட்ட நாயகன் விருதை சமி பெற்றுள்ளார்.

New comments are not allowed.
 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by