ஐ.நா சபை மனித உரிமைகள் பேரவையில்
இலங்கைக்கெதிரான சர்வதேச விசாரணை கோரும் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள
இத் தருவாயில் இந்தியாவிடமிருந்து ஆதரவு கிடைக்கும் எனும் நம்பிக்கையை
இலங்கை தொடர்ந்தும் பேணி வந்த நிலையில் நேற்றைய தினம் ஜனாதிபதிக்கும்
இந்திய பிரதமருக்குமிடையில் ஏற்பட்ட சந்திப்பில் எவ்விதமான வாக்குறுதிகளும்
இந்திய தரப்பில் வழங்கப்படவில்லையென அறியமுடிகிறது.
உள்நாட்டு அரசியலில் குறிப்பாக
தமிழ்நாட்டிலிருந்து பாரிய அழுத்தங்களை சந்தித்து வரும் இந்தியப் பிரதமர்
மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற 25 நிமிட சந்திப்பில் இந்த
விவகாரம் குறித்து எதையுமே பேசவில்லையென இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர்
தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment