அன்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ
அவர்களால் பொத்துவில் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்ட சிலை திறப்புக்கு
எதிராக பொத்துவில் உலமா சபையினர் பல வழிகளிளும் தங்களாலான முஸ்தீபுகளை
மேற்கொண்டதோடு, நான்கு நாள் தொடர் ஹர்தாலுக்கு மக்களை அழைத்த போது
பொத்துவில் பிரதேச அரசியல் வாதிகளினதும், ஸ்ரீ.மு.கா தலைவர் ரஊப் ஹகீம்
அவர்களின் நேரடி தலைடயீட்டின் காரணமாக அம்பாறை மாவட்ட செயலாளருக்கும்
குறிப்பிட்ட அரசியல் வாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட சமாதான உடன்பாட்டின்
பின்னர் குறித்த ஹர்தாலுக்கான அழைப்பு கைவிடப்பட்து.
குறித்த விடயம் தொடர்பாக பொத்துவிலில்
காணப்பட்ட பதட்ட நிலையினை கலைவதற்காகவும், மக்கள் மத்தியில் தெளிவினை
ஏற்படுத்துவதற்காகவும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் பாசித் அவர்களினால்
விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று பிரதேச உலமாக்களும், பட்டதாரிகளும், அரசாங்க
உத்தியோகத்தர்களும் 03.04.2013ம் திகதி பொத்துவில் பொது நூலக சாலையின்
கேட்போர்கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல கருத்துகள் பரிமாரப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் பொத்துவில்
பிரதேச செயலகத்தின் திட்டமிடல் அதிகாரியும், ஆசிரியருமானA.B.அஷ்ரப்
அவர்கள் உலமாக்களை நோக்கி தகாத வார்தைகளை பயன்படுத்தியதோடு தன் காலணிகளை
கழற்றி உலமாக்களை நேக்கி வீசியபோது அது பெயர் குறிப்பிட விரும்பாத இளம்
உலமாக்களின் தோள்களை பதம் பார்த்துள்ளன. உலமா சபையின் மீது காணப்பட்ட
காழ்புனர்சியினை வெளிக்காட்டுவதற்கான சிறந்த களமாக குறித்த ஒன்று கூடலை
பயன்படுத்தியவர் உலமாக்களை கடுமையாக விமர்சித்ததோடு உலமா சபையினை கலைக்க
வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளார்.
பொத்துவில் பிரதேசத்தில் பாக்கியவத்தை அன்
நஜாத் பள்ளிவாயல் நிருவாக சபையின் கீழ் புதிதாக நிர்மானிக்கப்பட்ட
பள்ளிவாயலை தனது கொள்கை சார்பு பள்ளிவாயலாக மாற்றுவதற்கு முற்பட்டபோது
அதற்கு தடையாக நின்ற குறித்த நிருவாக சபையிரை நீக்கிவிட்டு தனது கொள்கை
சார்ந்தவர்களை உட்புகுத்துவதற்கான முஸ்தீபுகளை முடுக்கிவிட்டு பிரச்சினைகள்
உருவான போது பொத்துவில் உலமா சபையின் நிருவாகிகள் தடையாக இருந்தமையானது
குறித்த உலமாக்கள் மீதான செருப்பு வீச்சுக்கும், உலமா சபை கலைப்பு
கோரிக்கைக்குப் பின்னால் உள்ள காரணம் என பாதிக்கப்பட்ட உலமா சபையின்
உறுப்பினர் தெரிவித்ததோடு குறித்த பின்புலத்தினை மிகவும் நம்பத்தகுந்த
நண்பர்களும் ஊர்ஜிதம் செய்தனர்.
மேற்படி அஷ்ரப் அவர்களின் செயற்பாட்டினை
தடுக்காமலும், இது வரைக்கும் கண்டன அறிகை விடாமல் இருக்கும் தவிசாளரையும்
கண்டித்து, ஆசிரியர் அஷ்ரப் அவர்கள் உலமாக்களிடத்தில் மனிப்பு கோர வேண்டும்
என பொத்துவில் பிரதேச பொதுமக்கள் அமைப்பு பிரதேசம் பூராகவும்
துண்டுப்பிரசும் ஒண்றினை வெளியிட்டிருந்தும் இது வரையிலும் குறித்த நபர்
மன்னிப்பு கோராமல் இருப்பது பொத்துவில் உலமாக்கள் மத்தியில் சங்கடத்தை
உருவாக்கியுள்ளது.
Post a Comment