கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது பௌத்தசிங்கள இனவாத கும்பல் ஒன்று
சுற்றிவளைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதனால் மஹ்ரிப் தொழுகைக்கு
சென்றவர்கள் அங்கு சிக்குண்டுள்ளதாகவும் மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர்கள்
ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினர்.
அத்துடன் காடையர் கூட்டம் பள்ளிவாசல் மீது மேற்கொண்ட தாக்குதலை அங்கு காவலுக்கு நின்ற பொலிஸார் வேடிக்கை பார்த்தாகவும் அறியவருகிறது.
அதேவேளை நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் அங்கு விரைந்துள்ளதாகவும்,
பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக
தனக்கு தகவல் கிடைத்ததாக அமைச்சர் பசீர் சேகுதாவூத் ஜப்னா முஸ்லிம்
இணையத்திடம் கூறினார்.
முஸ்லிம்கள் நேற்று நோன்புப் பெருநாளை கொண்டாடியுள்ள நிலையிலும்,
கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் செயற்பட பௌத்தசாசன அமைச்சு செயலாளர்
உறுதியளித்துள்ள நிலையிலும் இவ்வாறான தாக்குதலை பௌத்த இனவாதிகள்
மேற்கொண்டிருப்பது கோழைத் தனமானது என வர்ணித்த அமைச்சர் றிசாத் பதியுதீன்
இதுதொடர்பில் பாதுகாப்பு அமைச:சு செயலாளர் கோட்டபய ராஜபக்ஸவிடம் உடனடியாக
தொடர்புகொண்டு அங்கு ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து தான்
விளக்கிக்கூறியதாகவும், அதற்கு அவர், குறிப்பிட்ட பிரதேசத்தின் பாதுகாப்பை
பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததாகவும் றிசாத் பதியுதீன்
கூறினார்.
Post a Comment