இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தம் 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் பின்னர் இலங்கை மீது மனித உரிமை மீறல் மற்றும் போர்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை கூட்டத் தொடரில் இரண்டு முறை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் விளைவாக ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். (ஒகஸ்ட் 25 - 31)
வடக்கு பகுதிக்கு விஜயம் செய்த நவநீதம்பிள்ளை இலங்கையின் முன்னாள் போர் வலயங்களை பார்வையிட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்துள்ளார். மக்களும் கண்ணீர் வடித்துக் கொண்டு நவநீதம் பிள்ளையிடம் முறைப்பாடுகளை செய்துள்ளனர். இலங்கையில் இருந்து நாடு திரும்பியதும் நவநீதம்பிள்ளை இலங்கை குறித்து அறிக்கை தயாரிக்கவுள்ளார். இந்த நிலைமைகளின் பின்னணியில் இலங்கை எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் சவால்கள் என்ன? இலங்கை விழுமா..? எழுமா..? உங்கள் கருத்துக்களை பதிவு செய்து கருத்து வெளியிடும் உரிமையை பாதுகாத்துக் கொள்ளுங்கள்...
Post a Comment