எச்சரிக்கையை அடுத்து, மகியங்கனையில் உள்ள பள்ளிவாசல் பல நாட்களாக
மூடப்பட்ட நிலையில் உள்ளதால், ரமழான் நோன்பிருக்கும் முஸ்லிம்கள்
தொழுகையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள பௌத்த அடிப்படைவாதக்
குழுவொன்றின் அச்சுறுத்தலை அடுத்து மகியங்கனை பள்ளிவாசல் கடந்த
வெள்ளிக்கிழமை தொடக்கம் மூடப்பட்ட நிலையில் உள்ளது.
இந்தப் பள்ளிவாசலைத் திறந்து மீண்டும் தொழுகையை நடத்த ஏற்பாடு செய்யும்படி,
பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 18 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து வேண்டுகோள் விடுக்கவுள்ளனர்.
இது தொடர்பாக ஆராய இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத்தில்
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று ஒழுங்கு
செய்யப்பட்டுள்ளது.
Post a Comment