
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று பாராளுமன்றில் தயாசிறி ஜயசேகர தனது பதவியை இராஜினாமா செய்து அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க அலரி மாளிகைக்குச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் வடமேல் மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக தயாசிறி களமிறங்கவுள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(அத தெரண - தமிழ்)
Post a Comment