Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

தலைப்பிறை மறைக்கப்பட்டதா? இலங்கையில் மர்மம், ஜமியத்துல் உலமா மெளனம், பின்னணி என்ன?

Thursday, August 80 comments

மெளலவிமார் என்று அழைக்கப்படும் மார்க்கப் புரோகிதக் கூட்டம் குறித்து பல்வேறு தகவல்களை நாம் வெளியிட்டு வருகின்றோம். இன்று புதன் மாலை பிறை காணாவிட்டாலும், சிலரின் மறைமுக அழுத்தத்தின் காரணமாக பெருநாள் கொண்டாடப்படும் என்று முதலில் ஒரு ரகசிய செய்தி கசிந்து இருந்தது, தற்பொழுது கிண்ணியாவிலிருந்து புதிய நாடகம் ஆரம்பமாகியுள்ளது.


இதனை எழுதும் நேரம், புதன்கிழமை இரவு 10.15 மணி.


சற்று முன்னர் இலங்கை ஜமியத்துல் உலமா பிறை தென்படவில்லை, வெள்ளிக்கிழமை பெருநாள் என்று அறிவித்து உள்ளது. இவ்வறிவித்தல்  ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது.

இது, ஏற்கனவே கசிந்த இரகசிய செய்திக்கு முரணாக உள்ளது.

இந்நிலையில் கிண்ணியாவில் தலைப்பிறை தென்பட்டதாகவும், அதனை சுமார் 20 பேர்வரை பார்த்துள்ளதாகவும் நாடு முழுவதும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போன்று புத்தளத்திலும் தலைப்பிறை தென்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




இது கிண்ணியாவில் இருந்து செயல்படும் கிண்ணியா நெட் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தி.

lhttp://kinniya.net/2011-11-08-16-59-46/2011-11-08-17-00-45/2484-2013-08-07-14-31-14.htm

கிண்ணியாவில் ஜாவாப் பள்ளி , காக்கமுனை, ஜாமில் அஸ்கர் ஆகிய மூன்று இடத்தில் நம்பகமான சுமார் 20 பேர் பிறை காண்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பு பெரிய பள்ளி வாசளின் உத்தியோக பூர்வமான முடிவினை எதிர் பார்க்கப்படுகின்றது


(குறித்த செய்தியினை kinniya.com , kinniya.net ஆகிய இணையத்தளங்களில் காணலாம்)


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர், கிண்ணியாவில் தென்பட்ட பிறையை உறுதிப் படுத்தி, வியாழக்கிழமை பெருநாள் என்று அறிவித்து உள்ளனர். நாடு முழுவதும் உள்ள தவ்ஹீத் கூட்டங்களும், சலபி கூட்டங்களும் நாளை பெருநாள் என்று அறிவித்து விட்டன.

ஜமியத்துல் உலமா என்ன செய்யப் போகின்றது என்று தெரியவில்லை.

கிண்ணியாவில் தென்பட்ட பிறையை ஜமியத்துல் உலமா ஏன் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரியவில்லை. எவ்வித விளக்கங்களும் வழங்கப்படவில்லை.



இரண்டு ஜும்மா குத்பா வந்தால் நாட்டின் முக்கிய புள்ளிகளுக்கு நல்லதல்ல என்று சொன்ன சாத்திரம் தவறு, வெள்ளிக்கிழமை பெருநாள் வந்தால் தான் நாட்டின் முக்கிய புள்ளிகளுக்கு நல்லது என்று சாத்திரக்காரனின் கணிப்பு மாறியதால், கிண்ணியா பிறை ஜுப்பாவுக்குள் மறைக்கப் பட்டதா?

அல்லது, சஹருக்கு சாப்பிட எழும்பும் நேரம் பெருநாள் என்ற அரசியல் சப்ரைஸ் அறிவித்தல் வருமா?

எதோ ஒரு நாடகம் நடக்கின்றது என்பது மட்டும் புரிகின்றது.
ஜுப்பா போட்ட லெப்பை புரோகிதர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by