முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக்கூட்ட மேடையில் ஏறுவதா அல்லது
அமைச்சர் பதவியை துறப்பதா என்பது குறித்து விரைவில் தீர்மானிக்கவுள்ளதாக
அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் சற்றுமுன்னர்
ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக இருந்தகொண்டு
தேர்தல்களில் தனியாக களமிறங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவேதான்
கடந்தமுறை பிரதியமைச்சர் பதவியை ராஜனாமா செய்தேன். அதுபோன்று தற்போது
முஸ்லிம் காங்கிரஸ் 3 மாகாண தேர்தல்களில் தனித்து போட்டியிடுகிறது.
எனவே எனது மனச்சாட்சிபடி அமைச்சுப் பதவியை சுமந்தவனாக முஸ்லிம் காங்கிரஸின்
தேர்தல் பிரச்சார மேடையில் ஏறுவதற்கு நான் தயாரில்லை. எனவே முஸ்லிம்
காங்கிரஸின் தேர்தல் பிரசச்hர மேடையில் நான் ஏறுவதென்றால் அமைச்சுப் பதவியை
ராஜினாமா செய்யவேண்டியுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பேன். கட்சித்
தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸுடனும் இதுகுறித்து
கலந்துரையாட உள்ளேன் எனவும் பசீர் சேகுதாவூத் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம்
மேலும் கூறினார்.
Post a Comment