
மத்தள விமான நிலையத்தில் எதிர்பார்த்த விமானப் பயணங்கள் இடம்பெறாத நிலையில் அது விமானங்களை பழுதுபார்க்கும் இடமாக பயன்படுத்தப்படவுள்ளது
விமானசேவைத்துறை பணிப்பாளர் பிரசன்ன விக்கிரமசூரியவின் தகவல்படி இலங்கையின் விமானங்கள் மட்டுமன்றி வெளிநாடுகளின் விமானங்களும் மத்தளை விமான நிலையத்தில் வைத்து பழுது பார்க்கப்படவுள்ளன.
இந்த திட்டம் 209 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனினும் இந்த திட்டத்துக்கு முதலீடு செய்ய இன்னும் வெளிநாட்டு நிறுவனங்கள் எவையும் முன்வரவில்லை.
எனவே அதனை தாம் எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதாக விக்கிரமசூரிய தெரிவித்தார்.
பல பில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மத்தள விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் தரையிறங்காமை காரணமாக அங்கு பாரிய நட்டம் எதிர்நோக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment