Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

இலங்கையில் யுத்தம் முடிந்தும் பயங்கரவாதச் சட்டம் ஏன் இருக்கிறது:- நவநீதம்பிள்ளை கேள்வி

Tuesday, August 270 comments

தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பல வழக்குகள் ஏன் நிலுவையில் இருக்கின்றது அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாமை

தொடர்பிலும் .நா மனித உரிமையாளர் கேட்டறிந்தார் என ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று காலை 11 மணியளவில் நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சந்திப்பின் பின்னர் அமைச்சர் ஹக்கீம் ஊடகவியலாளர் மாநாடொன்று ஏற்பாடு செய்திருந்தார். அதன்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சுயாதீனமாக செயற்படுவது எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. பொதுவான விடயங்களை பலவற்றை நாம் பேசினோம். அவர் என்னிடம் பல கேள்விகளையும் கேட்டிருந்தார்

குறிப்பாக குற்றவியல் சட்டங்களில் கொண்டுவரப்படும் புதிய திருத்தங்கள் தொடர்பாகவும் நீதிமன்ற அணுகு முறை தொடர்பாகவும் என்னிடம் கேட்டறிந்து கொண்டார். மேலும் யுத்தத்திற்கு பின்னரான தற்போதைய நிலைமைகள், புரிந்துணர்வு நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் ஆராய்ந்தார்

அத்துடன் எமது அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பரிந்துரைகள் குறித்து தெளிவுபடுத்தினேன். தொடர்ந்து தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பல வழக்குகள் ஏன் நிலுவையில் இருப்பதாகவும் அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாமை தொடர்பிலும் கேட்டறிந்தார்.

இதேவேளை, பள்ளிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது மற்றும் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பிலும் அவரது கவனம் உள்ளதுடன் இது தொடர்பில் எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு கேட்டார்

அதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளோம். இது குறித்து அவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தேன். இதேவேளை, ஏனைய மதங்களை பற்றி இழிவுபடுத்துவதை குற்றமாக கருதும் சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளமை குறித்தும் தெரிவித்தேன். மற்றும் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமைச்சு , பயங்கரவாத தடைச்சட்டம் தற்போதும் நடைமுறையில் ஏன் உள்ளது

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என நவநீதம் பிள்ளை தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை நீதித்துறை அமைச்சர் தெரிவித்தார். வெலிவேரிய சம்பவம், தகவல் அறியும் சுதந்திரம், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கிடையிலான பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் விளக்கங்களையும் மேட்டறிந்து கொண்டார் என்றார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by