|
||||||||
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை
ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையை சந்திப்பதற்கு சிறீ லங்கா
முஸ்லிம் காங்கிரசுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என வெளிவிவகார
அமைச்சு தெரிவித்துள்ளது.
நவநீதம்பிள்ளையை சந்தித்து இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகள் குறித்து அவரது கவனத்திற்குக் கொண்டு செல்லவுள்ளதாக
மு.கா. செயலாளர் ஹஸன் அலி எம்.பி. தெரிவித்திருந்தார். இருப்பினும்
தற்போது வெ ளிவிவகார அமைச்சு மு.கா. நவநீதம்பிள்ளையை
சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கட்சியின் தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம், நீதியமைச்சர் என்ற வகையில் தான் நவநீதம்பிள்ளையை
சந்தித்துப் பேசிய சமயம் முஸ்லிம்கள் தொடர்பில் எடுத்துக்
கூறியுள்ளதாகவும் இருப்பினும் அவரிடம் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்
அறிக்கையொன்றைக் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாகவும்
குறிப்பிட்டுள்ளார்.
.
Post a Comment