புத்தளத்துக்குப் பொறுப்பான அமைச்சர் இன்று புத்தளத்தில் இல்லை. அவருக்கு அரசாங்கம் அமைச்சரவை அந்தஸதுள்ள அமைச்சு பதவி ஒன்றைவழங்கியுள்ளது. கட்சியின் அங்கீகாரமில்லாமல் அவர் அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளார்.திடீரென்று வழங்கப்பட்ட பதவியுயர்வானது எனக்கு சமாந்தரமான அமைச்சுப் பதவியாகும்.
அவர் தான் எமது கட்சின் புத்தளம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர். ஆனால் அவர் இங்கு இல்லை. அவர் இங்கு வரமாட்டார். அப்படி அவர் வரவேண்டியிருந்தால் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் புத்தளத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
தற்போது அவர் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவு பிழை என்று மேடைகளில் பேசுவதுடன் அறிக்கையும் விடுகின்றார். அறிக்கை விடுவதில் அர்த்தமில்லை. இந்த கட்சியின் போராளிகளை நேரடியாகச் சந்திப்பதற்கு அவருக்குத் திராணியிருக்க வேண்டும். அவருக்கு முடியுமாக இருந்தால் அந்த விடயத்தை நேரடியாக வந்து மக்கள் முன் பேச வேண்டும்” எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ. தவம் உட்பட புத்தளம் மற்றும் வடக்கில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோரும் கலந்துகொண்டனர்.

Post a Comment