
மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாக திவயின செய்தி வெளியிடுள்ளது.
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பின்னர் இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது.
எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர். அரசாங்கத்தில் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி அல்லது பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளன.
அதேவேளை மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் தற்போது அமைச்சராக உள்ள சிறுபான்மை இனத்தை சேர்ந்த கட்சி ஒன்றின் தலைவரின் அமைச்சு பதவி பறிக்கப்படும் எனவும் சிரேஷ்ட அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
அப்படியாயின், அந்த பதவி பறிப்பு தனித்துப் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமுடையதா? அல்லது நுவரெலியாவில் தனித்துப் போட்டியிடும் தொண்டாவின் அமைச்சுப் பதவியா???
Post a Comment