இராணுவத் தளபதிகள் வரிசையில் இருந்து சரத் பொன்சேகா நீக்கப்பட்டுள்ளார்.
இராணுவத் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதிகளின்
ஒளிப்பட வரிசையில் இருந்து சரத் பொன்சேகாவின் படம் நீக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் 20வது தளபதியாகப் பொறுப்பேற்ற லெப்.ஜெனரல் தயா ரத்னாயக்க,
பதவியை விட்டு விலகிச்சென்ற இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின்
ஒளிப்படத்தை திறந்து வைத்தார்.
ஆனால், அதற்கு முன்னால் இருக்க வேண்டிய, முன்னாள் இராணுவத் தளபதி சரத்
பொன்சேகாவின் படம் அங்கு இருக்கவில்லை. சரத் பொன்சேகாவின் படம் இருந்த
இடத்திலேயே ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் படம் வைக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, 2009 ஜுலையில் சிறிலங்கா இராணுவத் தளபதியாக பதவியேற்ற போது
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் படத்தை திறந்து வைத்திருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment