
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் எழுதிய தந்தை செல்வா தொடர்பிலான நூலின் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர்களான வாசுதேவ நாணயகார, ஏ.எச்.எம்.பௌசி, பஷீர் சேகுதாவூத் மற்றும் பேராசிரியர் சோ. சுந்திரசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
அத்துடன் மு.கா செயலாளர் நாயகம் ஹசனலி, ஜ.ம.மு தலைவர் மனோ கணேசன், ஸ்ரீரங்கா எம்.பி. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், முஸ்லிம் காங்கிரஸின் மூத்த துணைத் தலைவர் முழக்கம் மஜீத், தேசிய பணிப்பாளர் ஏ.சி.யஹியாகான் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment