இனங்களுக்கு இடையில் குரோதங்களையும் துவேஷத்தையும் ஏற்படுத்துபவர்களுக்கு
எதிராக சட்டம் அமுல்படுத்தப்படுமென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்
ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இன்று வெளிவிவகார
அமைச்சில் சந்தித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,கிராண்ட்பாஸ் விவகாரம்
குறித்து நவிபிள்ளை வினவியபோதே இதனை தெரிவித்துள்ளார்.
கிராண்ட்பாஸ் சம்பவத்தை அனைத்து மதங்களை சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்து
சுமூகமாக தீர்த்து கொண்டதாகவும் குறுகிய இலாபம் பெறும் நோக்கில்
செயற்பட்டவர்கள் சிலர் சம்பவத்தை பெரிது படுத்தியதாகவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களில்
உண்மையில்லை என இதன் போது மேலும் தெரிவித்துள்ள பீரிஸ், அரசியல்வாதி,
பொதுத்துறை உத்தியோகத்தர்கள், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் அதிகாரிகள்
உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் ஒரே விதமாக சட்டம்
அமுல்படுத்தப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
Post a Comment