
வெலிவேரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து ஐக்கிய அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று (02) விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது மக்களுக்கு அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்வதற்குள்ள உரிமைக்கு மதிப்பளிக்குமாறு அமெரிக்க இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், அனைத்து பக்கங்களிலும் இருந்தும் கட்டுப்பாடுகளை பேணுமாறு அமெரிக்கா இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.
Post a Comment