எதிர் வரும் ரமழானை முன்னிட்டு இலங்கையில் உள்ள நோன்பாளிகளுக்கு வழங்கவென
சவூதி அரேபிய அரசாங்கம் 200 மெற்றிக் தொன் பேரீத்தம் பழங்களை அன்பளிப்பாக
வழங்கியுள்ளது.
மேற்படி பேரீத்தம் பழங்களை உத்தியோக பூர்வமாக வழங்கும் நிகழ்வு கடந்த
09ஆம் திகதி பிரதமரும் புத்தசாசன மற்றும் மதவிகார அமைச்சருமான
டி.எம்.ஜயரத்ன தலைமையில் அவரது வாசஸ்தளமான விசும்பாயவில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் பிரதமரிடம்
கையளித்தார். மேற்படி நிகழ்வில் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி,
பிரதியமைச்சர்களான எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தன, ஏ.ஆ.எம்.அப்துல் காதர்
மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஷ் செய்யத் அலவி மௌலானா, முஸ்லிம் சமய
பன்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல், பிரதிப்
பணிப்பாளர் ரபீக் இஸ்மாயில், உதவிப்பணிப்பாளர் நூறுல் அமீன் உற்பட திணைக்கள
அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேற்படி பேரீத்தம் பழங்களை இலங்கையில் உள்ள சகல பள்ளி வாசல்களுக்கும்
முஸ்லிம் சமய பன்பாட்டலுவல்கள் திணைக்களத்தினூடாக பகிர்தளிக்கப்படுவதற்கான
நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல்
தெரிவித்தார்.
Post a Comment