கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகள் சம்பந்தமான கலந்துரையாடல் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி
சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இன்று முதல்வர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது தனியார் பஸ் உரிமையாளர்கள், சில தனியார் பஸ் ஆசனப் பதிவு
நிலையங்கள் கூடுதல் தரகுப் பணத்திற்காக தங்களுக்காக பதிவு செய்த ஆசனங்களை
வெளியூர் பஸ்களுக்கு வழங்குவதனால் தாம் இதனால் நஷ்டம் அடைவதாக
தெரிவித்தனர்.
இதனையெடுத்து கல்முனை மாநகர எல்லைக்குள் இனிவரும் காலங்களில் தனியார் பஸ்
ஆசனப் பதிவு நிலையங்கள் மூலம் ஆசனப் பதிவுகளை மேற்கொள்ளாது, மாநகர சபை
அங்கீகாரத்துடன் தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆசன பதிவுகளை மேற்கொள்ள
வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபைத் தவிசாளர்
ஜே.ஏ.கருணாரட்ன, கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின்
பணிப்பாளர் நாயகம் டவுள்யு.எச்.எம்.உதய குமார மற்றும் கல்முனை மாநகர
ஆணையாளர் ஜே.லியாகத் அலி, இலங்கை போக்குவரத்து சபை உயரதிகாரிகள் மற்றும்
தனியார் பஸ் உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment