கல்முனை மாநகர சபையில் ஆசிய மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளுர்
பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தினை மேலும் இரண்டு வருடங்களிற்கு
தொடர்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று
(14) முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் முதல்வர் கலாநிதி சிராஸ்
மீராசாஹிபினால் ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் சுபாகரனிடம்
கையளிக்கப்பட்டது. இதன் மூலம் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஆசிய மன்றத்தின்
இச்செயற்பாடு கல்முனை மாநகர சபையில் தொடரப்படவுள்ளது.
முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர
பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கணக்காளர் எல்.ரீ.சாலிதீன், ஆசிய மன்றத்தின்
சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் சுபாகரன், திட்ட உத்தியோகத்தர்
எம்.ஐ.எம்.வலீத், முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ஏ.எல்.எம்.இன்சாட்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment