Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

நோயாளி இரத்த வாந்தி எடுப்பதை கவனியாது தொலைக்காட்சி நாடகம் பார்க்கும் தாதியர்கள்.

Thursday, May 300 comments

கொழும்பு தேசிய வைத்தியசாலை நோயாளர்களை அலட்சியப்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒரு நோயாளி இரத்த வாந்தி எடுப்பதை வைத்தியர்களினதும், தாதிகளினதும், பணியாளர்களினதும் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அங்கு வைத்தியசாலையின் தொலைக்காட்சியில் SOAP OPERA நாடகம் பார்ப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதாக அதனை நேரில் கண்டவர் சாட்சி சொல்கிறார்.

இது தொடர்பில் அவர் கொழும்பு டெலிகிராப் இணையதளத்தில் தெரிவித்திருந்த கருத்தினை இங்கு தமிழில் தருகிறோம்.

“நேற்றிரவு (28.05.2013), நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஒரு இளம் பயிற்சி தாதி கிருலப்பனை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்றிலிருந்து துாக்கி வீசப்பட்டு என்னுடைய காருக்கு முன்பாக வலது புறத்தில் விழுந்தார்.

சம்பவம் தொடர்பில் பஸ் சாரதியை வெள்ளவத்தை பொலிசார் விசாரணை செய்து கொண்டிருந்த வேளையில் நானும் எனது நண்பரும் விழுந்த அந்தப் பெண்ணை முழு நாட்டிற்கும் பொதுவான கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக அழைத்துச் சென்றோம்.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு நுழைவாயிலை நாங்கள் அண்மித்த போது அங்கிருந்த ஒரு தாதி நோயாளியை சக்கரம் கொண்ட படுக்கையில் அமர்த்தி கொண்டு செல்லுமாறு எங்களை வேண்டிக் கொண்டார்.

நேற்று வைத்தியசாலையின் பணியாளர்களுக்கு ‌வேலைகள் நிறைந்த ஒரு இரவாக இல்லாதிருந்த போதிலும் பல சிரமங்களையும் தாண்டி அந்த நோயாளியை விபத்துப் பிரிவில் அணுமதிக்குமாறு பொறுப்பானவர்களை வேண்டிக் கொண்டோம்.

அப்போது அந்த நோயாளி இரத்த வாந்தி எடுப்பதை வைத்தியர்களினதும், தாதிகளினதும், பணியாளர்களினதும் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அங்கு வைத்தியசாலையின் தொலைக்காட்சியில் SOAP OPERA நாடகம் பார்ப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. இணைக்கப்பட்டுள்ள புகைப்படமே அதற்கு ஆதாரமாகும்.

மனவேதனைப்பட்டுக் கொண்டு, அந்த நோயாளிப் பெண்ணின் X-RAY இனைப் பெற்றுக்கொண்டு விபத்துப் பிரிவில் அங்கும் இங்குமாக ஓடி ஒரு வைத்தியரிடம் அந்த நோயாளியை காப்பாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை விபரித்து அவரை பார்வையிடுமாறு அவரிடம் மன்றாடினோம்.

 கடைசியில், இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அந்தப் பெண் விபத்துப் பிரிவில் அணுமதிக்கப்பட்டார். அந்தப் பெண் விழுந்ததினால் அவருக்கு பாரிய விளைவுகள் ஏதும் இருக்கக் கூடாது என்று நாங்கள் பிராரத்தித்துக் கொண்டிருந்தோம்.

அந்த நேரத்தில் கோபத்தையும் வெறுப்பையும் நான் உணர்ந்தேன். வைத்தியசாலை நிகழ்வுகள் என்னை வெகுவாகப் பாதித்தது.அவசர தேவையுடைய ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கு அந்த வைத்தியசாலை எடுத்துக்கொண்ட கரிசனையை கண்டு நான் திகைப்படைந்தேன்.

சாதாரண மக்கள் வைத்திய சிகிச்சைகளை பெறுவதில் எவ்வளவு தேவையுடையவர்களாக இருந்து சிரமப்படுகின்றார்கள் என்பதை நினைத்து வெட்கப்பட்டேன். இது போன்ற சம்பவங்களை என்னுடைய வழ்வில் இதற்கு முதல் நான் சந்தித்ததில்லை. இதுதான் இந்த சொர்க்த் தீவின் (Island in Paradise) சோகமான உண்மை நிலை.

மனித உயிர்களுக்கு பெறுமதியில்லாத, மதிப்பில்லாத இந்த நாட்டில் இன்று நான் வாழ்வதையிட்டு வெட்கப்படுகின்றேன். உள்ளார்ந்த கருணையும், இரக்க உணர்வும் இப்போது நமது நமது கலாசாரத்தில் வெறும் கதைகாளாகவே காணப்படுகின்றன.

இது போன்ற விடயங்களில் சீர்திருத்தங்கள் வரவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட பல இளைஞர்கள் இருக்கின்றார்கள். அதுவே இந்த நாட்டின் வளர்ச்சியில் குறைந்தபட்டச அளவிலான பாங்களிப்பாக இருக்கும். எனவே இந்த செய்தியை சிறியளவேனும் மாற்றத்தை விரும்பும் நள்ள உள்ளங்களுக்கு மத்தியில் கொண்டு செல்லுங்கள்.

நன்றி
இப்படிக்கு,
Selyna. D. Peiris
LLB (Hull) LLM (London) MAIS (Vienna)
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by