Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

இவ்வருடத்திற்கான ஹஜ் கோட்டா 2,800 : விண்ணப்பதாரிகளோ 7,800

Thursday, May 300 comments


இவ்வருடத்திற்கான ஹஜ் கோட்டா 2,800 வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஹஜ் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை 7,800 ஜயும் தாண்டியுள்ளது. இதனால் இவ்வருட ஹஜ் பயணத்துக்கு முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

முதற் தடவையாக ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கே இவ்வருடம் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. அத்தோடு கடந்த 10 வருடங்களுக்குள் ஹஜ் பயணம் மேற்கொள்ளாத விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்களும் கவனத்திற் கொள்ளப்படுமென முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம். எம். எம். ஸமீல் தெரிவித்தார்.

பதல்ஹஜ் செல்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாதென்றும் முதன் முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஒரு பெண்ணுக்கு துணையாக அவரது கணவர் அல்லது மஹரமானவர் கடந்த பத்து வருடங்களுக்குள் ஹஜ் செய்திருந்தாலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமெனவும் ஸமீல் தெரிவித்தார்.
விண்ணப்ப ஒழுங்கு முறைகளுக்கேற்ப நேர்முகப் பரீட்சையில் ஹஜ் தெரிவுகள் இடம்பெறவுள்ளன. இதேவேளை, இவ்வருடத்துக்கான ஹஜ் முகவர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் விரைவில் நடைபெறவுள்ளன. ஹஜ் கட்டணம் தொடர்பில் இதுவரை தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறினார்.
.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by