கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை முதல்வர்
பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான ஒரு வார கால அவகாசத்தினை முஸ்லிம்
காங்கிரஸ் வழங்கியுள்ள நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (25.10.2013) ஜூம்ஆ
தொழுகையினை சாய்ந்தமருது ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் சிராஸ் நிறைவேற்றிவிட்டு
வெளியேறும்போது புடைசூடிய பொதுமக்கள் முதல்வர் பதவியினை எக்காரணம்
கொண்டும் விட்டுக்கொடுக்க வேண்டாம் என சிராஸிடம் தெரிவித்தனர்.
அங்கு அவர்கள்மேலும் தெரிவிக்கையில் நாங்கள் நடத்திய போராட்டத்தின் பலனாகவே
இப்பதவி எமக்கு கிடைத்தது, பொதுமக்களாகிய நாங்கள் எப்போதும் உங்களுடன்
இருக்கின்றோம், நீங்கள் இப்பதவியை இராஜினாமா செய்யக் கூடாது என ஆக்ரோசமாக
கருத்துக்களை வெளியிட்டனர்.
இதேவேளை இன்று காலை கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பதவி
விலகக் கூடாதென சாய்தமருது பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.

Post a Comment