Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

இலங்கை வாழ் ஒவ்வொரு முஸ்லிமினதும் கவனத்திற்கு...!

Sunday, May 120 comments

கடந்த ஒரு வருடகாலமாக இலங்கை முஸ்லிம்களின் மீது பௌத்த பேரினவாத அமைப்புக்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத நடவடிக்கைகள் பல ரூபங்களை அடைந்து இன்று ஓய்வடைந்து உள்ளது. ஆனாலும் அதன் தாக்கங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது. அவ் இனவாத அமைப்புக்கள் தனது குரலை அடக்கி வாசிக்கத்தொடங்கியுள்ளனர். இச் சந்தர்ப்பத்தில் எம்மீதுள்ள கடப்பாடுகள் குறித்து ஆராய வேண்டிய கால கட்டத்தில் இருக்கின்றோம்.
அந்த வகையில் இலங்கை வாழ் ஒவ்வொருவரு முஸ்லிம் மீதும் உள்ள சில கடப்பாடுகள் சில வருமாறு
1.       ஒவ்வொருவரு முஸ்லிமும் ஆன்மீக ரீதியில் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். இஸ்லாம் சொல்லுகின்ற, காட்டித் தந்த வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி உண்மையான முஸ்லிமாக வாழ வேண்டும். நம்பிக்கைகுரியவர்களாக, வாக்கு மீறாதவர்களாக திகழ வேண்டும்.
2.       ஒரு நாட்டில் ஒரு சமூகமானது அதிலும் குறிப்பாக சிறுபான்மை சமூகமானது அச் சமூகத்தின் வரலாற்றை அறிந்து வைப்பதும் குறிப்பாக தொகுத்து வைத்திருப்பது அந் நாட்டில் அச் சமூகத்தின் இருப்புக்கு அத்தியவசியமானதாகும். இலங்கையில் சிறுபான்மையாக வாழும்  முஸ்லிம்களின் வரலாறு குறித்துப் பார்த்தால், முஸ்லிம்களாகிய எங்களுக்கே பூரண தெளிவு இல்லாது இருக்கிறது. எமது வரலாறு முழுமையாக தொகுக்கப்பட்டு அது பொது மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப் பட வேண்டும்.
3.       எமது சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், முஸ்லிம்களுக்கோ அல்லது இஸ்லாத்திற்கோ எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டால்    அல்லது எமது உரிமைகள் மீது கை வைப்பார்களானால் உடனடியாக தகுந்த ஆதாரங்களோடு பொலீஸில் முறைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மனித உரிமை ஆனைக்குழு போன்றவற்றில் முறைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். 
4.       எமது சமூகத்தின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக பல சாராராலும்  உணரப்பட்டுள்ள அச்சு, இலத்திரனியல் ஊடகத் தேவையை உடனடியாக துறை சார்ந்தோர், வசதி படைத்தோரும் ஒன்றினைந்து நிவர்த்தி செய்ய வேண்டும்.
5.       எமது சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அல்லது எமது உரிமைகள் மீது கை வைப்பார்களானால் அதனை உடனடியாக எம்மத்தியில் சிங்கள , ஆங்கில மொழி அறிவு, எழுத்தாற்றல் உள்ளவர்கள் தேசிய, சர்வதேச சிங்கள , ஆங்கில பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் எழுத வேண்டும். அத்துடன் இஸ்லாம் பற்றியும் , முஸ்லிம்கள் பற்றியும் தேசிய சிங்கள , ஆங்கில பத்திரிகைகளுக்கும் , சஞ்சிகைகளுக்கும் எழுத வேண்டும்.
6.       எம்மத்தியில் (ஊர் வாரியாக) சிறந்த ஆரோக்கியமான சிவில் சமூக அமைப்புக்களை உருவாக்கி எமது வணக்கஸ்தலங்களையும், மத்ரஸாக்களையும், கலாச்சாரத்தையும், சின்னங்களையும், உரிமைகளையும், சொத்துக்களையும் பாதுகாக்க ஆரோக்கியமான திட்டங்களை வகுத்தல் வேண்டும்.
7.       கடந்த காலங்களில்  நாம் விட்ட தவறுகளை நாம் இனங்கண்டு அவற்றை இயன்றளவு திறுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து முஸ்லிம்களும் எப்போதும் ஓரணியில் நின்று எம் முன்னுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
யா அல்லாஹ்..............................!
இலங்கை மற்றும் சர்வதேச முஸ்லிம்களையும், மஸ்ஜித்களையும், மத்ரஸாக்களையும், இஸ்லாமிய சின்னங்களையும், உரிமைகளையும், சொத்துக்களையும் பாதுகாத்தருள்வாய்க.
முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற தலைவர்களுக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளைக் கொடுப்பாயாக. எதிரிகளின் சதிகளிலிருந்து அவர்கள் உட்பட முழு முஸ்லிம் உம்மாவையும் பாதுகாப்பாயாக. 
                                                                 ஆமீன்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by