அமைச்சர் விமல் வீரவசன்சவினால்
இயக்கப்படும் சிங்கள இணையமொன்றில் வெளியாகிய செய்தியை எமது இணையமும்,
இன்னும் இணையங்களும் அதனை மீள்பதிவிட்டிருந்தன. இந்நிலையில் அமைச்சர் விமல்
வீரவன்சவுடைய இணையத்திற்கு கல்முனை மேயர் பதவி தொடர்பிலோ அல்லது முஸ்லிம்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராகவோ எதனையும்
குறிப்பிடவில்லையென சிறாஸ் மீராசாஹிப் கூறினார்.
சிறாஸ் மீராசாஹிப் தொடர்ந்து கூறுகையில்,
இன்னும் நான் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராகவே உள்ளேன். நான் தலைவர் ரவூப்
ஹக்கீமுக்கு எதிராகவோ அல்லது அவருக்கு சவால் விடும் வகையிலோ எவற்றையும்
கூறவில்லை. இந்நிலையில் அமைச்சர் விமல் வீரசன்சவுக்கு சார்பான சிங்கள
இணையத்தளம் நான் கூறாதவற்றை கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளமை
துரதிஷ்டவசமானது என்றார்.
Post a Comment