Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

ரிஸானா நபீக்கின் தாயாருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்

Wednesday, August 140 comments


சவுதி அரே­பி­யாவில் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட மூதூர்- சாபி நகரைச் சேர்ந்த றிஸானா நபீக்­கி­னு­டைய பெற்­றோர், தமக்­கு ஒரு சில வாரங்­க­ளாக அச்சுறுத்தல்விடுக்கும் வகையில் கிடைக்கப் பெறும்  தொலை­பேசி அழைப்­புக்கள் தமது மனதை புண்­ப­டுத்தும் வகையில் அமைந்­தி­ருப்­ப­தாக தெரி­வித்­துள்­ள­னர்.

இது குறித்து றிஸா­னாவின் தாய் றுபினா தெரி­வித்­துள்­ள­தா­வது: -நான் இன்னும் எனது மகள் றிஸா­னாவின் கவ­லை­யி­லி­ருந்து மீள­வில்லை. இந்த நேரத்தில் எனக்கு இனந் தெரி­யாத சில தொலை­பேசி இலக்­கங்­க­ளி­லி­ருந்து உங்­க­ளுக்கு எத்­தனை வீடு கட்டி தந்­தி­ருக்­கின்­றார்கள்? எத்­தனை கோடி ரூபாக்கள் உங்­க­ளது வங்கி கணக்கிள் வைப்பில் இடப்­பட்­டுள்­ளன என்­றெல்லாம் கேட்­கப்­ப­டு­கி­ற­து.

தொலை­பேசி அழைப்­புக்கள் வந்து என்­னையும் எனது கண­வ­ரையும் மேலும் கவ­லை­ய­டையச் செய்யும் வண்ணம் உள்­ளது.

எமது நாட்டு அர­சி­யல்­வா­தி­களும், தன­வந்­தர்­களும்,பொது­மக்­களும் இன மத பேதங்­க­ளுக்கு அப்பால் உதவி செய்­தி­ருக்­கின்­றார்கள். அத்­தோடு இலங்கை இரா­ணு­வத்­தி­னரால் வீடொன்று அமைக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. அதனை நானும் ஏற்றுக் கொள்­கின்றேன். ஆனால் மற்­றை­ய­வர்கள் நினைப்­பது போன்று இறை­வன்­மீது ஆணை­யாக கோடி கணக்­கான ரூபாக்கள் எமக்கு வர­வில்லை.

என­வே தான் எனது மகளை நினைத்து இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் எமது குடும்பத்தை மேலும் கவலையடையச் செய்ய வேண்டாமென உரையாடிய போது கவலையோடு தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by