சிறை செல்லவெண்டியவரா ஆசாத் சாலி ?!!சிம்மாசனத்தில் இருக்கவேண்டியவர்
ஜனாதிபதிக்கு கூஜாதூக்கவில்லை பதவிகளை தூக்கி எறிந்தார்சமூகத்துக்காக சிறையில் வாடுகிறார்
ஆஸாத் சாலி ஒரு அரசியல் குட்ம்பத்தில் இருந்து வந்தவர் இவரது தந்தை
ஒரு அரசியல் வாதி அதன் அடிச்சுவட்டில் இவரும் அரசியல் வாதி !!
இலங்கை முஸ்லிம்களுக்கான அரசியல் பாதை மாமனிதர் அஸ்ரபின் காலத்தில்
புதுவடிவம் பெற்றது இரண்டு கட்சிகளுக்குள் அடங்கி இருந்த முஸ்லிம் தலைவர்கள்
ஓரம் கட்டப்பட்டு முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்த்தது
அந்த மாமனிதரின் படுகொலைக்கு பின் முஸ்லிம் காங்கிரஸ் சின்னாபின்னமானது !!!
வடம் இழந்த தேர் இழுக்கமுடியாமல் நாதியற்று!!! அந்த உண்மையை புரியவைத்தது
பொது பலசேனா !!!
ஜெய்லானி எங்கள் உரிமை கேள்விக்குறியாக்கப்பட்ட போது ராவய சிஹல உறுமய
போன்ற கட்சிகளுக்கு எதிராக ஓங்கி ஒலித்தது சாலியின் குரல் இது உடைக்கப்பட வேண்டிய இடம் என்று மறைமுக ஆதரவை தவ்ஹீத் ஜமாத் எங்கள் எதிரிகளுக்கு வழங்கியது அதன் எதிரொலி அனுராத புர தக்கியா தரை மட்டமாக்கப்பட்டது ?!!!
இது முஸ்லிம்களின் ஒருபிரிவினரின் வேலை என்று கோத்தபாய அறிவித்தார் ஜனாதிபதி
முஸ்லிம்களே நீங்கள் உங்களுக்குள் ஒற்று மையாகுங்கள் என்று அறிவுரை கூரினார் !!!
வாய் மூடி அமைதியாக இருந்தது முஸ்லிம் தலைமை தவ்ஹீத் தப்லீக் ஜம்மியத்துல்
உலமா அதன் எதிரொலி தம்புள்ளையில் ஒலித்தது !!!!யார் பூனைக்கு மணிக்கட்டுவது ?
இதன் தொடர்ச்சி ஹலால் உரிமை என்று புது அவதாரம் எடுத்தது ஜம்மியத்துல் உலமா
தவ்ஹீத் ஜமாத் தப்லீக் ஜமாத் தரீகா என்று எல்லோரும் குறிவை க்கப்பட்டார்கள்
முஸ்லிம் தலைமை கண்டுக்கொள்ளவில்லை ஒளிந்துக்கொண்டார்கள் நிர்கதியான
முஸ்லிம் சமூகம் செய்வதறியாது திகைத்தது தொடர்ச்சியாக 17 மஸ்ஜித்கள் தாக்கப்பட்டன சகோதரிகளின் பர்தாக்கள் இழுக்கப்பட்டன வியாபாரஸ்தலங்கள்
பறிமுதல் செய்யப்பட்டன ?!!!எங்கெசென்றது முஸ்லிம் தலைமை !!!!!!!
அப்படியா ?!!அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என்று பாராளுமன்றிலே சத்தியம் செய்தது
முஸ்லிம் தலைமை மரத்திலே இருந்துவிழுந்தவனை மாடுமுட்டியதாம் !!!!!
பூனைக்கு யார்மணிக்கட்டுவது ?!!!!!
அச்சத்தால் அடங்கி இருந்த சமூகத்துக்குயார் குரல்கொடுப்பது ?!!ஆஸாத் சாலி என்று ஒருவன் சிங்கம் போன்று கர்ஜித்தான் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் ஒரே குரலாக
ஒலித்தது அவன் குரல் அவன் இயக்க வேறுபாடு பார்க்கவில்லை ஊரே எரிந்துகொண்டிருக்கும் பொழுது தவ்ஹீத் ஜமாத் கமலஹாசனுக்கு எதிராக விஸ்வறுபம்
எடுத்தார்கள் சிரிப்பதா !!!அழுவதா !!!
ஆஸாத் சாலியின் குரல்மட்டும் ஐ நா சபை வரை ஒலித்தது அரசபயங்கரவாதம் அவரை
குறிவைத்தது முஸ்லிம் அமைச்சர்கள் ஒத்தூதினார்கல்!!!!காரணம் அவர்கள் முஸ்லிம்
சமூகத்தின் ஆதரவை இழந்து நின்றது ஆஸாத் சாலியின் புகழோ ஓங்கி நின்றது பொறாமை வஞ்சம்தீர்த்துக்கொண்டது !!!!அவர் கைது செய்யப்பட்டார் சிறையில் அடைக்கப்பட்டார் நிம்மதி பெருமூச்சு விட்டது முஸ்லிம் அமைச்சுக்கள் பரிதாபம்
ஆஸாத் சாலி புகழ் உலகமட்டத்தில் ஒலித்தது அதன் விளைவு சிறைக்குள் சமாதிக்கட்டும்
நாடகம் அரங்கேற்றப்பட உள்ளது அதன் அங்கம் அவருக்கு எதிராக பிரச்சாரங்கள்
இது அரசுமட்டத்தில் இருந்து அரங்கேறுகிறது ?!!
தவ்ஹீத் ஜமாத்தின் உளவுத்துறை இவரது சமையல் அறைவரை சென்றுவந்துள்ளது !!!
இங்கே மஸ்ஜித்கள் உடைக்கப்பட்டுள்ளன எங்கள் உரிம கேள்விக்குறியாக்கப்பட்டுள்
உங்கள் போராட்டங்களை நடாத்துங்கள் சமூகத்தை ஒன்று திரட்டுங்கள் அதை விட்டு
குரல்கொடுத்தவனை சிறைக்குள் சமாதிக்கட்ட மக்களை திரட்டவேண்டாம் !!!!!!
உங்கள் உள்நோக்கம் வெட்ட வெளிச்சம் நன்றி கெட்ட அரசியல் வாதிகள் போன்று நன்றி
கெட்ட சமூகமாக மாறிவிடாதீர்கள் ஒரு யுத்தமுனையில் வீரர்களும் தியாகிகளும்
கோழைகளும் துரோகிகளும் தெரிவுசெய்யப்படுகிறார்கள் !!முஸ்லிம் சமூகத்துக்கெதிரான
யுத்தக்கலத்திலே ஆஸாத் சாலி வீரனாகவும் தியாகியாகவும் நான்பார்க்கும் உலகம்
கண்டுக்கொல்கிறது !
ஜம்மியத்துல் உலமாவின் ஆணையின் படி போயாவில் முஸ்லிம்கள் தன்சல் கொடுத்ததை மறந்துவிட்டீர்களா ?!!!உலமாக்கள் பன்சலை தோறும் ஏறி இறங்கியதை
தேரர்கள் முன்னிலையில் சாஷ்டாங்கமாக இருந்ததை பார்க்கவில்லையா ?!!!
எங்கள் அமைச்சர்கள் பன்சலை கோவில் கிருஸ்தவ தேவாலயம் சென்று வணங்கியதை
பார்க்கவில்லையா ?!!! கலிபா உமர் (ரலி ) அவர்கள் யூத தேவாலயத்துக்கு அழைத்து
செல்லப்பட்டார்கள் !!ஆஸாத் சாலியின் விடுதலைக்கு பன்சலையில் நடந்த பிரார்த்தனையில் அவர் மகள் கலந்துக்கொண்டது விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது
வேடிக்கையாக உள்ளது ஆசாத் சாலி இனமத பேதமின்றி குரல் கொடுத்தார் இது பல்லின
மக்கள் வாழும் நாடு அவர் மதக்கட்சியை அங்கத்துவப்படுத்தவில்லை சகோதரர்களே
இவர்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்
Post a Comment