கொழும்பில் இருந்து பயணிகள் பஸ்ஸில் கல்முனைக்கு எடுத்து வரப்பட்ட ஒரு
தொகை சட்ட விரோத சிகரட்டுகள் கல்முனை பொலிசாரினால் கைப்பற்றப் பட்டுள்ளது.
இன்று 17-07-2013 அதிகாலை 5.00 மணிக்கு கல்முனையில் தேநீர் கடை ஒன்றின்
அருகே பஸ்ஸில் கொண்டுவரப்பட்ட பொதிகளை இறக்குகின்ற போதே பொலிசாரினால்
சுற்றி வளைக்கப்பட்டு இந்த சட்டவிரோத சிகரட் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து சம்மாந்துறைக்கு பயணிகளை ஏற்றி செல்லும் போதே இந்த
சம்பவம் கல்முனையில் இடம் பெற்றுள்ளது . சம்மாந்துறைக்கு செல்ல வேண்டிய
பயணிகளை கல்முனையில் இறக்கி விட்டு பொலிசார் பொலிஸ் நிலையத்துக்கு பஸ்ஸை
எடுத்து சென்று விட்டனர். இதனால் கொழும்பில் இருந்து வந்த பயணிகள் செய்
வதறியாது தெருவோரத்தில் நின்றிருந்தனர்.
பஸ்சுடன் கைப்பற்றப்பட்ட சட்ட விரோத சிகரட்டும் ,சாரதியும் கல்முனை போலீசில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.


Post a Comment