பயங்கரவாதத்தை ஒழித்த அரசாங்கத்திற்கு ஏன் முஸ்லிம்களுக்கு எதிராக ஈடுபடும் குழுக்களை கண்டு பிடித்து ஒழிக்க முடியாது என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்
கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் அரசாங்கம் 12 பள்ளிவாசல்களை உடைத்துள்ளது. அந்தவகையில்
அண்மையில் மகியங்கனை பள்ளிவாசல் மீது பன்றி இறைச்சியை வீசித் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.
தொமட்டகொட பகுதியில் உள்ள மாடுவெட்டும் மடுவத்தில் லொறியொன்றுக்கு
தீவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொண்டு
இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து
முஸ்லிம்களும் அரசுக்கு எதிராக வீதியில் இறங்க வேண்டிய நிலையேற்படும்.
பயங்கரவாதத்தை ஒழித்த அரசாங்கத்திற்கு ஏன் முஸ்லிம்களுக்கு எதிராக ஈடுபடும்
குழுக்களை கண்டு பிடித்து ஒழிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment