பொத்துவில் ஆதர வைத்தியசாலையின் பொடுபோக்கு செயற்பாடு காரணமாக நேற்று (2013.07.16) இரண்டு உயிர்கள் பரிதாப மரணத்தை சுவாசித்துள்ளன.
சம்பவம் பற்றி மேலும் தெரிரிய வருவதாவது....!
ஒரு இளம் கர்ப்பிணிப் பெண் குழந்தைப் பேருக்காக பொத்துவில் ஆதர
வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். கடந்த 3 நாட்களாக மிகுந்த
அவதிப் பட்டிருக்கிறார். இந்த நிலையில் மகப்பேற்று வைத்திய அதிகாரி தன்
பாட்டிலும், ஏனைய வைத்திய அதிகாரிகள், தாதிகள் என அனைவரும் தங்கள்
போக்கிலும் என பொடுபோக்காக இருந்திருக்கிறார்கள். அந்த கர்ப்பிணிப் பெண்
மிகுந்த வேதனையால் துடித்திருக்கிறார். இவர்களின் பொடுபோக்குத் தனத்தில்
அதிருப்தியுற்ற அந்த கர்ப்பிணிப் பெண் தன்னை அக்கரைப்பற்று ஆதார
வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைக்கு அனுப்பும்படி வேதனை தாங்க முடியாமல்
கெஞ்சியிருக்கிறார். சம்பந்தப்பட்ட வைத்தியசாலை அதிகாரிகள் அதை
கண்டுகொள்ளவில்லை. அப் பெண்ணின் மீது கருணை கொள்ளவில்லை.
அந்த பெண் இப்படி பெரும் அவதிப்பட காரணம் அவரது வயிற்றில் இருந்த குழந்தை 6
கிலோகிராம் கொண்டதாக இருந்திருக்கிறது. அப்படியாயின் இது வைத்திய
அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. காரணம் அந்த பெண்ணின்
கிளினிக் அட்டையில் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன்
அப்பெண்ணின் ஸ்கேனிங் அறிக்கையும் வைத்தியத் துறை அதிகாரிகளின் கையிலேயே
இருந்திருக்கும். இந்த நிலையில் இந்த பெண்ணின் பிரசவம் கடினமானதாக
இருப்பினும் இதை வெற்றிகரமாக செய்து முடிக்க தங்களால் முடியுமா...?
முடியாதா ...?வென்பது அவர்களுக்கு இதனை வைத்து கணக்குப் போட
முடிந்திருக்கும். வறட்டு கௌரவத்திற்காக அந்த பெண்ணை அவர் கேட்டுக்கொண்டபடி
அவரை மேலதிக துரித நடவடிக்கைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு
அனுப்பாமல் இறுதி வரை வைத்திருந்துள்ளார்கள். நிலைமை இக்கட்டாக, தாங்கள்
சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள அந்த கர்ப்பிணி பெண்ணும்,
சிசுவும் மரணிக்கும் தருவாயில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு
அனுப்பியிருக்கிரார்கள்.
இந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கும், பொத்துவில் ஆதார
வைத்தியசாலைக்கும், இடைப்பட்ட தூரம் சரியாக 46 கிலோமீட்டர்கள் ஆகும். இது
தெரிந்திருந்தும் இந்த பொறுப்பற்ற அதிகாரிகள் இப்படி நடந்து கொண்டது
மிகுந்த முட்டாள்தனம், கண்டிக்கத்தக்க மிகக் கொடூரமான செயல் ஆகும்.
அம்பியுலன்ஸ் வண்டியில அந்த கர்ப்பிணி பெண்ணை ஏற்றி அனுப்பிய போது,
அம்பியுலன்ஸ் வண்டி நான்கைந்து கிலோமீட்டர் செல்கையிலேயே அம்பியுலன்ஸ்
வண்டியினுல்லேயே அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது, ஆனால் சிறிது
நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டது...!
ஆரம்பத்திலேயே பொத்துவில் வைத்திய அதிகாரிகள் நல்ல சிந்தனையுடன்
செயற்பட்டிருப்பின் அப்பெண்ணை முன்கூட்டியே அக்கரைப்பற்று ஆதார
வைத்தியசாலைக்கு அனுப்பியிருக்க முடிந்திருக்கும். அந்த இரண்டு
உயிர்களையும் காப்பாற்றியிருக்க முடிந்திருக்கும். அனால் நடைப்பினமாகும்
வரை அவர்களை அனுப்பாது வைத்திருந்துவிட்டு ஆபத்து நெருங்குகையில்
தப்பித்துக்கொள்ளவே இறுதியில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு பிணமாக
அனுப்பியுள்ளார்கள். இந்த நிலையில் அவர்களாலும் காப்பாற்ற முடியத அளவுக்கு
அந்த பெண்ணின் நிலைமை மிகவும் மோசமாக இருந்துள்ளது இதனால் அக்கரைப்பற்று
ஆதார வைத்தியசாலை அதிகாரிகள் அந்த பெண்ணை உடனடியாக மட்டக்களப்பு
வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளார்கள். இருப்பினும் என்ன பயன்....? அவரும்
உயிர் பிரிந்துவிட்டார். இந்த இரண்டு உயிர்களையும் கொன்று தின்ற பாவம்
பொத்துவில் வைத்தியசாலை அதிகாரிகளையே சாரும்....!
பொத்துவில் வைத்தியசாலையில் எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லை.
அண்மையில்தான் புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மகப்பேற்று அரை திறந்து
வைக்கப்பட்டது என்று தெரிய வருகிறது. அதிகாரிகள் பொறுப்பற்று இருந்தது,
இருந்து வருகின்றமைக்கு சட்ட நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்களால் எடுக்கப்பட
வேண்டும்...!
சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகள் சட்டப்படி இதற்கு நடவடிக்கை எடுத்து மேலும்
பல உயிர்களை இவர்கள் கொன்று தின்னாமல் இருக்க நடவடிக்கை உடன் எடுக்கப்பட
வேண்டும் என்பதுடன் இது தொடர்பாக புலன் விசாரணைகள் உடன் மேற்கொள்ளப்பட
வேண்டும். இது பொத்துவில் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இவர்கள் இந்த சம்பவத்தில் மட்டுமல்ல முன்னும் பல விடயங்களில் பொடுபோக்காகவே
இருந்து வந்துள்ளனர். இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது . முன்னர் நடந்த
பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வரவில்லை....

Post a Comment