
செப்டம்பர் மாதம் திறந்துவைக்கப்படவுள்ள
கட்டுநாயக்க-களணி அதிவேகப் பாதையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்
ராஜபக்ஷ நேற்று (14) பார்வையிட்டார்.
இந்த அதிவேகப் பாதையின் இரு மருங்கிரலும் நிழல் தரும் பாரிய மரங்களை நடுமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
கட்டுநாயக்க முதல் களணி வரையிலான 26 கிலோ
மீற்றர் தூரம் கொண்ட இந்த அதிவேகப் பாதை அமைக்கும் பணியை துறைமுகங்கள்
மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
பணிப்பின்போரில் 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்தது.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் வட
பகுதிக்கான அதிவேகப் பாதை அமைக்கப்பட்டதன் பின்னரே இந்த தெற்கு மற்றும்
கட்டுநாயக்க அதிவேகப் பாதையின் உண்மையான பயன்பாடு மக்ளுக்குக் கிடைக்கும்
என்று கூறினார்.
Post a Comment