நேற்று இரவு ரீ.என்.எல் தொலைக்காட்சியில் கிராண்பாஸ் பள்ளிவாசல் அருகில் உள்ள பண்சலையின் உள்ள பொளத்த தேரர்களும் முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அசாத்சாலி, மாகாண சபை உறுப்பினர் முஜ்ஜிபு ரஹ்மான், அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் ACMCகட்சியின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட் ஆகியோர் இணைந்து கிராண்பாஸ் பள்ளிவசால் சம்பந்தமாக எழுச்சி என்ற நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துக்களில்;
பௌத்த தேரர் தெரிவிக்கும் கருத்து-
முஸ்லீம்கள் பள்ளிவசால்களையோ அவர்களது பாடசாலைகளை அமைக்கும் போது முஸ்லீம் கலாசாரம் உள்ளது. அதற்கேற்ப பிறை பதித்து பள்ளிவசால்களை நிர்மாணிப்பார்கள். ஆனால் புதிய பள்ளிவாசல் அந்த நிர்மாணக் கலையை கொண்டிராத ஒரு அவசர கட்டிடம் எனச் சொன்னார்.
இதனை நகர அபிவிருத்தி அதிகார சபை நிர்மாண அனுமதி வழங்கவில்லை எனவும் இந்தப் பள்ளியை அகற்றி வேறு இடத்தில் அமைப்பதற்கு தான் காணி தேடித் தருவதாகவும் குறிப்பிட்டார்.
அதற்கு பதில் அளித்த வை.எல்.எஸ் ஹமீட்; பம்பலப்பிட்டியில் உள்ள பள்ளிவாசாலும் எவ்வித கட்டக்கலையுமின்றி சாதாரண கட்டமாகவே கட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்
பள்ளிவாசலை உடைப்பதை நேரடியாக வெப்தளம் ஊடாக பீ.பி.சி எவ்வாறு செய்தி வெளியீடுகிறது. இதனை நேரடியாக பாருங்கள் என அசாத் சாலி தனது மடி கணனி ஊடாக தேரர்களுக்கு எடுத்துக் காண்பித்தார்.
முஜிபுர் ரஹ்மான்; இதற்கெல்லாம் அரசாங்கம் பின்னால் உள்ளது. மஹியங்கனை, தம்புல்ல, பள்ளிவாசல் உடைத்தது யார்? என விளக்கிக் கூறினார்.
இவர்களை நேரடியாக தொலைக்காட்சிகள் உலக மக்களுக்கு காண்பித்தது. இவர்களில் ஒருத்தரையாவது பொலிசார் பிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்தினார்களா ?
கிராண்பாஸ் பள்ளியை உடைத்தவர்களை பொலிசார் இதுவரை ஒருவரையாவது பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தினார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தேரர்கள்; பள்ளியை உடைக்க வந்தவர்கள் பௌத்தகளோ எமது பிரதேசத்தில் உள்ளவர்கள் அல்ல, வேறு பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் இவர்கள் சிங்களவர்கள் அல்ல இதற்கு முழுக்க முழுக்க காரணம் பௌத்த சாசன அமைச்சையே குற்றம் சாட்டுகின்ற்னர்.
சிறிது காலம் முடி வைக்கச் சொல்கின்றனர். நோன்பு காலத்தில் பள்ளியை நடத்திச் செல்ல அனுமதி வழங்குகின்றனர். இதனாலேயே பிரச்சினை தோன்றியது எனவும் கிராண்பாஸ் தேரர் தெரிவித்தார்.

Post a Comment