
மஹிந்த அரசாங்கம் வித்தியாமானதொரு தேர்தல் களத்தினை முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மஹிந்த அரசாங்கம் பல அபிவிருத்தி
நடவடிக்கைகள் மூலம் பெரியதொரு வெற்றியை பெற்றுக்கொள்ள முனைப்பு காட்டி
வருவதாக அண்மைய நடவடிக்கைகள் மூலம் புலனாகிறது.
வடதமிழீழம், வட மத்திய, வடமேல் மாகாணங்களில் சிறிலங்கா அரசு தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் வட தமிழீழம் மற்றும் வட மத்திய மாகாணங்களில் மஹிந்த
அரசாங்கம் படுதோல்வியை சந்திக்கவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம்
அரசாங்கத்தை உஷார் படுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மாகாணங்களிலும் அரசாங்கம் தோல்வியடையும் என்று புலனாய்வு
பிரிவின் பணிப்பாளர் சந்திர வாகிஸ்ட், பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கிய
இரகசிய அறிக்கையே இதற்கு காரணம் என தெரியவருகிறது.
புலனாய்வு பிரிவின் அறிக்கையின்படி வட தமிழீழத்தில்
எதிர்க்கட்சிகளுக்கு 90 வீதமான ஆதரவும், மத்திய மாகாணத்தில் 70 வீதமான
ஆதரவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடதமிழீழ தேர்தல் களம் தவிர்ந்த ஏனைய இரு மாணாங்களில் பாரிய வெற்றியை
பெற தேசத்திற்கு மகுடம் எனும் அஸ்திரத்தை மஹிந்த அரசு பிரயோகித்து
வருகிறது.
இதன்அடிப்படையில், வடமேல் மாகாண சபைக்குரிய குருணாகல் மாவட்டத்தின்
கல்கமுவ தொகுதிக்கு மாத்திரம் அரசாங்கம் 280 கோடி ரூபாவை தேசத்திற்கு
மகுடம் என்ற போர்வையில் அரசாங்கம் வழங்கியுள்ளது. ஒரு கிராம சேவையாளர்
பிரிவுக்காக மாத்திரம் 40 லட்சம் ரூபா முதல் 50 லட்சம் ரூபா
ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர மாகாண உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபா
வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள பணத்தை கிராம சேவகர்கள் மற்றும் அரச
அதிகாரிகள் மூலம் வாக்காளர்களை திரட்டி, அவர்களுக்கு இலஞ்சம் வழங்குமாறு
உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கிராமங்கள், பிரதேசங்கள் பிரித்து
பணத்தை செலவிடுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வட தமிழீழம் மற்றும் வட மத்திய மாகாண சபைத் தேர்தல்களில்
முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக ஓய்வுபெற்ற
இரண்டு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்
பின்னணியில் கோத்தபாய செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment