தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அஸாத் ஸாலி மற்றும் மனோ கனேஷன் ஆகிய
இருவரும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சி
பட்டியலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட உள்ளனர்.
கண்டி பிரதேசத்தில் பரவி இருக்கும் இச்செய்தி சம்பந்தமாக தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அஸாத் ஸாலியிடம் வினவிய போது,
தானும் மனோ கனேசன் அவர்களும் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன்
இனைந்து போட்டியிடுவது சம்பந்தமாக இடம் பெரும் பேச்சுவார்த்தை வெற்றி
அளித்துள்ளதாகவும் தாம் இருவரும் ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில்
போட்டியிடுவது பெரும்பாலும் உறுதியாக உள்தாகவும் தெரிவித்தார்.
இருந்தபோதும் தனக்கு கண்டி அல்லது குருநாகள் மாவட்டங்களில் தனித்து
போட்டியிட்டு பாரிய வாக்குகளை பெற்று வெற்றிபெற முடியும் என்றும் தெரிவித்த
அவர் அவ்வாறு தான் தனித்து போட்டியிட்டால் ஐக்கிய தேசிய கட்சி வசம் உள்ள
முஸ்விம் வாக்குகளில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
Post a Comment