நாளை
மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கல்முனையில் பொதுபல சேனா கூட்டம் நடைபெற
மாட்டாததென பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இன்று
நவமணிக்குத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவரிடம் தொலைபேசியில்
தொடர்புகொண்டு கேட்டபோது, ஞாயிற்றுக்கிழமை கல்முனையில் கூட்டத்தை நடாத்தி
தாங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை என்றும் அங்கு ஏதாவது
அசம்பாவிதங்கள் நடைபெற்றால் தங்களது தலையிலேயே கட்டுவதற்கு எங்களுக்கு
எதிரானவர்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலமைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும்
ஞாயிற்றுக்கிழமை கல்முனையில் பொதுபல சேனாவின் கூட்டம் நடைபெறமாட்டாது.
ஆனால், கிழக்கின் எல்லா இடங்களுக்கும் செல்லும் நோக்கம் எங்களுக்கு உள்ளது
என்றும் அதற்கான அதிகாரம் தங்களிடம் இருப்பதாகவும் அவர் மேலும்
தெரிவித்தார்.
அண்மையில் பதுளையில் நடைபெற்ற பெதுபல சேனா
கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 07) கல்முனையில் கூட்டம்
நடாத்தப்படுமென பெதுபல சேனா செயலாளர் ஞானசார தேரர் பகிரங்கமாக அறிவித்தல்
விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment