கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத்திடமிருந்து தனக்கு எந்தவிதமான
அறிவுறுத்தல் கடிதங்களும் கிடைக்கப்பெறவில்லையென கல்முனை மேயர் சிராஸ்
மீராஸாஹிப் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
எனது தந்தையின் பெயரில் திறக்கப்பட்ட நூலகம் குறித்து கிழக்கு மாகாண
முதலமைச்சரிடமிருந்து எனக்கு எத்தகைய கடிதங்களும் கிடைக்கப்பெறவில்லை.
எனக்கு அவ்வாறு ஏதேனும் கடிதங்கள் கிடைத்திருப்பின் நிச்சயம் நான்
முதலமைச்சருடன் இதுதொடர்பில் கலந்துரையாடியிருப்பேன். முதலமைச்சர் எனக்கு
உத்தகைய உத்தரவுகளையும் பிறப்பிக்காத நிலையில் நான் முதலமைச்சர் உத்தரவை
மீறிவட்டதாக எவரும் கூறிமுடியாது.
எனது அரசியல் வளர்ச்சியை சகிக்காத சிலர் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்
ஏ.மஜீத்திடம் 3 நாட்களாக நின்று எனது தந்தையின் பெயரில் திறக்கப்பட்ட
நூலகத்தை எப்படியாவது திறக்காதிருக்க முயன்றனர். அவர்கள் யார் என்று
மக்களுக்கு தெரியும்.
சாய்நமருது பிரதேச அரசியல்வாதியொருவரும், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள்
சிலரும் எனக்கெதிராக சதித்திட்டங்களை தீட்டுவதை நான் அறிவேன். கொழும்பில்
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் முன் வாக்குறுதிகளை
வழங்கி, மாநகர சபையின் சீரான நிர்வாகத்திற்கு ஒத்தழைப்பு நல்குவதாகவும்
வாக்குறுதி வழங்கியவர்களே இந்த சதித்திட்டத்தின் பங்காளிகள்.
சாய்தமருதின் வளர்ச்சிக்காக, கல்முனையின் மேம்பாட்டுக்காக எத்தகை
பங்களிப்பையும் இதுவரை வழங்காத இந்த அரசியல்வாதிகளுக்கு வேகமாகவும்,
விவேகத்துடனும் கல்முனை மாநகர சபையை நான் வழிநடாத்திச் செல்வது
பிடிக்கவில்லை. எனது அரசியல் வளர்ச்சியும, மக்களுக்கான எனது சேவைகளும்,
மக்கள் எனக்கு வழங்கும் ஆதரவும் இவர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது.
இதன்விளைவே இவர்கள் கீழத்தர செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமைக்கு காரணமாகும்.
இருந்தபோதும் இவர்களின் பகற் கனவு ஒருபோதும் பலிக்காது. மக்களுக்கான எனது
சேவைகள் தொடரும் எனவும் கல்முனை மேயர் சிராஸ் மீராஸாஹிப் மேலும்
தெரிவித்தார்.
Post a Comment