கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை
முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம்
எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது என அமைச்சர் ரவூப் ஹக்கீம்
தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை மாலை சாய்ந்தமருதில் இடம்பெற்ற நூலகத்திறப்பு
விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு
கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
உண்மையான நண்பர்கள் யார் என்பதை இந்த அரசாங்கம் பிரித்தறிந்துகொள்ள
வேண்டும். ஆனால் நாங்கள் தொடர்ந்தும் எங்களுக்கு அநியாயம் இடம்பெறும்போது
பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்திற்குள்ளே எதிரியாக கைவத்துக்கொண்டு
தங்களுடைய அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள அரசிற்கு உள்ளே
உள்ளவர்களும், வெளியே உள்ளவர்களும் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். இது
தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் உண்மையான போராளிகள் அவதானமாக இருக்க
வேண்டும்.
Post a Comment