Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

எனக்கும் ஹக்கீமுக்கும் எந்தப்பிரச்சினையும் இல்லை : ஹசன் அலி

Saturday, May 250 comments

காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடுகளுமில்லை. சில ஊடகங்களும் இணையத்தளங்களும் எமக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன்அலி தெரிவித்தார்.

ஹசன் அலி தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நான் எடுக்கும் முடிவுகள் யார் தயவிலும் எடுப்பதில்லை. நான் கட்சியின் கொள்கைகளின்படியே தீர்மானங்களை மேற்கொள்பவன். எவருக்கும் கூஜா தூக்குவதற்கு நான் விரும்பவில்லை.

தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் 19 ஆவது அரசியல் யாப்புச் சட்டத்தை சமர்ப்பிக்க உள்ளதாகவும் அதனை நான் எதிர்க்கவுள்ளதாகவும் தவறான கருத்துகளை ஊடகங்கள் பரப்பியுள்ளன. 19 ஆவது அரசியல் யாப்புச் சட்டத்தை கொண்டு வருமளவுக்கு தலைவர் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படமாட்டார் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.

அதிகாரப் பரவலாக்கல் மூலமே இன்று தீர்க்கப்படாதுள்ள எத்தனையோ சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு காலதாமதமின்றி தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். முஸ்லிம்களோ, தமிழர்களோ தனி இனமாக அடையாளப்படுத்தப்பட்டு செறிந்து வாழும் பூர்வீக பிரதேசங்களில் காணி அதிகாரம் வழங்கப்படுவது அவசியம் என்று முஸ்லிம் காங்கிரஸிடம் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறது.

சில சக்திகள் முஸ்லிம் காங்கிரஸுக்குள் பிளவினை ஏற்படுத்தி குளிர்காய முனைகின்றமை ஒரு போதும் நிறைவேறாத கனவாகும் என்றார்.

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by