Home13ஆவது திருத்தத்தின் எந்தவொரு சரத்தையும் நீக்க ஒத்துழைக்கப் போவதில்லை – ரவூப் ஹக்கீம்
13ஆவது திருத்தத்தின் எந்தவொரு சரத்தையும் நீக்க ஒத்துழைக்கப் போவதில்லை – ரவூப் ஹக்கீம்
13ஆவது
அரசியலமைப்பு திருத்தத்தின் எந்தவொரு சரத்தையும் நீக்குவதற்கு
ஒத்துழைப்புக்களை வழங்க போவதில்லை என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்
தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவமிச்சேனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்
கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர், தனது நிலைப்பாட்டை குறிப்பிட்டார்.
ரவூப் ஹக்கீம், ”இந்த நாட்டின் அரசியல் அமைப்பில் நிரந்தரமாக இருக்கின்ற
ஒரு திருத்தமாகத்தான் 13ஆவது சட்டத் திருத்தத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் நோக்குகின்றது. அந்த சட்டத் திருத்தத்தின் எந்த அம்சத்தையும்
அகற்றுவதற்கு அது பொலிஸ் அதிகாரங்களாக இருந்தாலும் சரி, காணி அதிகாரங்களாக
இருந்தாலும் சரி அகற்றுவதற்கு நாங்கள் எந்த விதத்திலும் உடந்தையாக
இருக்கமாட்டோம். என்பதை பகிரங்கமாக மிகத் தெளிவாக சொல்லி வைக்க வேண்டும்.
13ஆவது சட்டத் திருத்தத்தில் இருக்கின்ற அதிகாரங்களை விடவும் கூடுதலாக
அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்குகின்ற ஒரு திருத்தத்தை கொண்டு வருவதை
மாத்திரம் தான் நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம்”
Post a Comment