அலைக்கு பதிலாக கிளர்ச்சியை ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி தயார் என அதன் பாராளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
அசாத் சாலி கைது செய்யப்பட்டது அநிநாயம் எனவும் கிளர்ச்சி ஏற்படுத்துவதாகக் கூறிய தானும் கைது செய்யப்படலாம் எனவும் கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
தங்காலை, அக்குரஸ்ஸ, கஹவத்தை கொலை மற்றும் பாலியல் வல்லுறவுடன் தொடர்புடையவர்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதாகவும் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு கருத்து கொண்டவர்கள் கைது செய்யப்படுவதாகவும் ஹரேன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இம்முறை நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகள் மாநாடு மணமகள் அற்ற திருமண வீடாக இருக்கும் என ஹரேன் பெனாண்டோ விமர்சித்துள்ளார்.
இந்த மாநாட்டில் எலிசபத் மகாராணி பங்குகொள்ளப் போவதில்லை என தான் முன்னரே கூறியதாகவும் அதனை பிரதி சபாநாயகர் மறுத்ததாகவும் ஆனால் இன்று தான் கூறியது உண்மையாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment