இலங்கையில் ஹலாலை முழுமையாக ஒழித்துக்கட்டும் போராட்டத்தை மீண்டும்
எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப் போவதாக பொது பல சேனா
அறிவித்துள்ளது.
ஹலாலுக்கு எதிரான ஆர்ப்பாட்ட வாகனப் பேரணி 22ஆம் திகதி கொழும்பிலிருந்து – கண்டி நோக்கிப் புறப்படவுள்ளதாகவும் பொதுபல சேனா தெரிவித்தது.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொது பலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அதன் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்தார்.
“ஹலால் உணவு வகைகளை சிங்கள மக்கள் உண்ண வேண்டிய அவசியமும் கிடையாது. பெளத்த நாடான இலங்கைக்கு ஹலால் சான்றிதழுடனான உணவுப் பொருட்கள் அவசியமும் இல்லை என்ற போராட்டத்தை நாம் முன்னெடுத்தோம்.
இதன் பின்னர் இச்சான்றிதழ் வழங்கப்படாது என முஸ்லிம் அமைப்புக்களால் உறுதிமொழிகள் வழங்கப்பட்டதோடு ஊடகங்களில் விளம்பரங்களும் பிரசுரிக்கப்பட்டன.
ஆனால், உறுதிமொழிகள் நிறை வேற்றப்படவில்லை. எனவே, ஹலாலை முற்றாக ஒழிக்கும் போராட்டத்தை எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கின்றோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment