
மரணிக்கும் வரை கட்சி மாறவே மாட்டேன் என்கிறார் பொத்துவில் பிரதேச சபைத் தலைவர் எம்.எஸ்.அப்துல் வாஸித்.
பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர்
வாஸித் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார் என ஊடகங்களில் வெளியான
செய்தி குறித்து கருத்துத்; தெரிவித்த போதே தவிசாளர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால போராளியான நான் சிறிலங்கா முஸ் லிம்
காங்கிரஸில் இருந்து தேசிய காங்கிரிஸில் இணையப் போவதாக வெளியான செய்தி
குறித்து மிகுந்த மனவேதனை அடைகிறேன்.
கடந்த 24ஆண்டுகளாக சிறி லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து வருபவன் நான். அன்று, கட்சியின் தேசியத்
தலைவர் மர்கூம் எம்.எச்.எம் அ~;ரப்பின் மரணச்செய்தி கேட்டு, பட்டாசு
கொழுத்தி சந்தோசத்தை வெளியிட்டவர்கள் இன்று பொத்துவிலில் சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸை காப்பாற்றப் போகின்றோம் என்று தம்பட்டம் அடிப் பது
புரியாத புதிராகவுள்ளது. இதற்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும். இத்தகை
யவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.
யார் எதைச் சொன்னாலும், எனது மரணம் கூட
எமது மக்களின் கட்சியான சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடனான சேவைக்காகவே
இருக்கும். நான் ஒரு போதும் கட்சி மாறப்போவதில்லை என்பதை ஆணித்தரமாகக்
கூறுகிறேன் என்றார்.
-மூதூர் முறாசில்
+ comments + 1 comments
ok wacidh mahcan
Post a Comment