Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயரிய விருது பெற்ற இலங்கைத் தமிழர்

Thursday, May 300 comments

அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயரிய விருது பெற்ற இலங்கைத் தமிழர்

யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான Champion of Change விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (29) காலை வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இந்த விருது வழங்கல் நிகழ்வில் இவருடன் மேலும் 10 பேரும் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றவர்களுள் பேராசிரியர் எஸ். சிவானந்தன் ஒருவரே தழிழர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிக்காக்கோ இலினோஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றும் சிவலிங்கம் சிவானந்தன் இயற்பியலில் பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளதுடன், பல ஆய்வுகளிலும் இடுபட்டுள்ளார்.

தனது முயற்சியினால் "சிவானந்தன் ஆய்வு மையம்" என்ற இயற்பியல் ஆய்வு கூடத்தை நிறுவி அதனூடாக பல ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதுடன், இலாப நோக்கற்ற பல ஆய்வு உதவிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by