முப்படையினரை சிவில் பாதுகாப்பு பணிகளில் இருந்து படிப்படியாக நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, முப்படையினரை சிவில் பணிகளில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் கடந்த சில வருடங்களில் எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதி காக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
(அத தெரண - தமிழ்)
Post a Comment