
வடமேல்
மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நிறுத்தும் முயற்சிகள் தீவிரமாக
மேற்கொள்ளப்படுவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஜனநாயக
தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகாவே அதற்கான முயற்சிகளை
முன்னெடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன் இணைந்து தான் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அண்மையில் அவர் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இதன் பின்புலத்தில் தற்போது வடமேல் மாகாண சபைத் தேர்தலில் பொன்சேகா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சந்திரிகா போட்டியிடவுள்ளதாக குறித்த இணையத்தள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு இருக்கும் ஆதரவுத் தளம் மற்றும் வடமேல் மாகாணத்தில் வசிக்கும் அதிகளவான இராணுவத்தினரின் ஆதரவு என்பவற்றைக் கொண்டு மாகாண சபை நிர்வாகத்தை கைப்பற்றும் வியூகத்தில் பொன்சேகா இறங்கியுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment