கிழக்கு மாகாண சபை எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று நேற்று சனிக்கிழமை
நடைபெற்றுள்ளது. இதில் கிழக்கு மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்கள்,
மாகாண முதலமைச்சர், மாகாண ஆளுநர், முஸ்லிம் அமைச்சர்கள் என பலர்
கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை
நோக்கி, மனந்திறந்து பேசுங்கள் என பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி இப்படிக் கூறியவுடன், கிழக்கு மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்கள்
சிலரோ சலுகைகள் குறித்து பேசியுள்ளனர். சிலர் தமக்கான அலவன்ஸ், வாகனம்
குறித்து சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாகாண நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு செய்வதாக முன்னர் அடிக்கடி கருத்து
வெளிட்டுவந்த எந்தவொரு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதி முன்
கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக மூச்சு விடவில்லையாம். பலர் சலுகைகள்
குறித்து பேசினார்களே தவிர குறிப்பிட்டு கூறும்படியான மக்கள் பிரச்சினைகள்
பற்றி கருத்துக்களை முன்வைக்கவேயில்லையாம்.
அதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, கிழக்கு மாகாண சபை ஆளும்கட்சி
உறுப்பினர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென அறிவுறுத்தி குறித்த கூட்டத்தை
நிறைவு செய்துள்ளார். இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் மூலம் இந்த
தகவல்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைக்கப்பெற்றன.
Post a Comment