கண்டி ஜனாதிபதி மாளிகையில் சனிக்கிழமை, 13 ஆம் திகதி, கிழக்கு மாகாண
சபையில் தோன்றியுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் முக்கிய கூட்டமொன்று
நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன்,
அதாவுல்லா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது இந்த 3 முஸ்லிம் அமைச்சர்களும் மஹியங்களை பள்ளிவாசலின் மீது
மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், பள்ளிவாசலில் பன்றி இரத்தம் ஓட்டப்பட்டமை
குறித்தும் தமது மனக்கவலைகளை ஜனாதிபதி மஹிந்தவிடம வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்களின் போது முஸ்லிம் சமூகமானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
தலைமையிலான அரசாங்கத்தையே குற்றம் சுமத்துவதாகவும், இதுபோன்ற சம்பவங்களை
அரசாங்கம் தடுத்து நிறுத்தலாமென்று முஸ்லிம் சமூகம் நம்புவதாகவும் 3
முஸ்லிம் அமைச்சர்களும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு பதில் வழங்கியுள்ள ஜனாதிபதி, முஸ்லிம் அமைச்சர்களை நோக்கி, ஓ
அப்படியா..? இந்த சம்பவம் குறித்து நீங்கள் யாரை சந்தேகப்படுகிறீர்கள் என
கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் பௌத்தகடும்போக்கு வாத
குழுக்கள்தான் என பதில் வழங்கியுள்ளனர்.
இதன்போது ஜனாதிபதி மஹிந்த மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த கிழக்கு மாகாண தேர்தலின்போது பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாக ரவூப்
ஹக்கீம் பிரச்சாரம் செய்தார். அப்படிச் பிரச்சாரம் செய்யாதீர்கள் என நான்
ரவூப் ஹக்கீமிடம் கூறினேன. தென்னிலங்கை சிங்கள மக்களிடத்திலும், பௌத்த
தேரர்களிடமும், இந்த பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டேன்
எனவும் கூறியவாறே, குறித்த பேச்சை தொடராமல் (டைவேர்ட்) வேறு ஒரு பேச்சை
ஆரம்பித்துள்ளார்.
Post a Comment